என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு"

    • உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.
    • இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் உள்ள மின்உற்பத்தி ஆலைகள், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால். உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.

    இருப்பினும், உள்நாட்டு நிலக்கரியின் தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

    இந்நிலையில், நடப்பாண்டில் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில், இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 கோடி டன் நிலக்கரியை இந்திய மின்உற்பத்தி ஆலைகள் பயன்படுத்தின.

    ஆனால், நடப்பாண்டில் இதில் 1 கோடியே 50 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத 2 மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது. 30 சதவீத நிலக்கரி இறக்குமதி குறைக்கப்படுகிறது.

    பொதுத்துறை நிறுவனமான கோல் இண்டியா மற்றும் தனியார் நிலக்கரி சுரங்கங்கள் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரித்துள்ளன.

    மேலும், நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடங்கள் அருகே புதிதாக நிலக்கரி உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளதாக நிலக்கரி வர்த்தகர் ராஜீவ் ராம்நாராயணன் என்பவர் தெரிவித்தார்.

    இந்த காரணங்களால், வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    • போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • புதுச்சேரி நகரின் முக்கிய பகுதிகளை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, டி.ஜி.பி., அலுவலகம், தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகம், ஜிப்மர், தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கும் ஜவஹர் நவோ தயா வித்யாலயா பள்ளி இ-மெயில் ஐ.டி.க்கு, வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்திருந்தது.

    அதில் பிரபல நகைச்சுவை நடிகரின் பேத்தி என்றும் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து போலீசில் புகார் அளித்தும் அவர் அரசியல் பிரமுகர் என்பதால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதற்காக மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். எனது நீதிக்காக நக்சலைட் மாணவர் பிரிவு உதவி செய்து வருகிறது. அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நவோதயா பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.

    இவ்வாறு அந்த இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், உடனடியாக காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகே வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. சோதனை போது மாணவர்கள் அனைவரும் பள்ளியின் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    வெடிகுண்டு மிரட்டல் குறித்து காலாப்பட்டு மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தர உள்ள நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதுச்சேரி போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    பிரதமர் மோடி வருகை தர உள்ள விமான நிலையம், லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானம் மற்றும் புதுச்சேரி நகரின் முக்கிய பகுதிகளை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

    புதுச்சேரி எல்லை பகுதி மற்றும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி வருகையையொட்டி புதுச்சேரியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • டிக்கெட் ரத்து செய்யப்பட்டதில் இருந்து 14 வேலை நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுத்தாக வேண்டும்.
    • வருகிற மார்ச் 26-ந்தேதி முதல் இந்த உத்தரவுகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    விமான டிக்கெட் ரத்து விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு செய்த 48 மணிநேரத்துக்குள் ரத்து செய்தால் விமான டிக்கெட் முழுத்தொகையும் பயணிகளுக்கு வழங்கப்படவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பின்னர் அவற்றை ரத்து செய்யும்போது அவற்றுக்கான 'ரீபண்டு' பணம் மிகவும் குறைவான அளவிலேயே வழங்கப்பட்டு வந்தது.

    பயணிகள் தலையில் இழப்பை சரிகட்ட விமான நிறுவனங்கள் மற்றும் முன்பதிவு ஏஜென்சிகளிடையே போட்டாபோட்டி நடந்தது. இதனால் பயணிகள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். குறிப்பாக கடந்த டிசம்பரில் இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து டிக்கெட் ரீபண்டுகளில் பெரிய மோசடி நடந்தது. இதனால் இந்த பிரச்சினை பூதாக்கரமாக வெடித்தது.

    இந்த நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த விதிமுறையில் இந்திய விமான போக்குவரத்தை நிர்வகிக்கும் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது.

    அதன்படி விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் பயணிகள், எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    விமான பயண டிக்கெட் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்பட்டாலும், பயணிகளுக்கு முழுத்தொகையையும் திரும்ப அளிக்கும் பொறுப்பையும் விமான நிறுவனங்களே ஏற்க வேண்டும்.

    டிக்கெட் ரத்து செய்யப்பட்டதில் இருந்து 14 வேலை நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுத்தாக வேண்டும். மேலும் 24 மணிநேரத்துக்குள் டிக்கெட்டில் திருத்தம் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    வருகிற மார்ச் 26-ந்தேதி முதல் இந்த உத்தரவுகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு சிறிய அளவிலான ஓ.டி.டி. தளங்களைக் கண்காணித்து வருகிறது.
    • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்தத் தளங்கள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழ், ஆபாசமான தகவல்களை மின்னணு முறையில் பரப்புவது தணடனைக்குரிய குற்றமாகும். கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு இத்தகைய சிறிய அளவிலான ஓ.டி.டி. தளங்களைக் கண்காணித்து வருகிறது.

    இந்த நிலையில் ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதாகக் கூறி, 5 ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்தத் தளங்கள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    குறிப்பாக, சந்தாதாரர்களை கவர்வதற்காக அநாகரீகமான மற்றும் வக்கிரமான காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
    • ஒன்றிய அரசின் தமிழக மீனவர் விரோதப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இலங்கை சிறையில் இருக்கும் 116 தமிழ்நாடு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் மீட்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு நவீன மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. கடந்த வாரம் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு 4 நவீன மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்னும் சில நாட்களில் விழா நடத்த வேண்டிய சூழலில் இத்தகைய கைது நடவடிக்கைகள் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்திருக்கிறது. இந்த கைது சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 மீனவர்களும், 259 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசின் காவலில் இருந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதியும் கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

    ஆனால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுத்துறை, தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டு வருகிறது.

    இத்தகைய ஒன்றிய அரசின் தமிழக மீனவர் விரோதப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்களும் பறிமுதல் செய்யப்பட படகுகளையும் உடனடியாக இலங்கை கடற்படை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.  

    • போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மென்ச்சோ' சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
    • அமெரிக்காவால் 15 மில்லியன் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மிக முக்கியமான குற்றவாளி.

    மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மென்ச்சோ' சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    உயர்மட்டத் தலைவன் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, ஆயுதமேந்திய குழுக்கள் பல்வேறு மாநிலங்களில் மோதலில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்றான CJNG அமைப்பின் தலைவன் ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ளது.

    அமெரிக்காவால் 15 மில்லியன் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மிக முக்கியமான குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மெக்சிகோவில் வெடித்த கலவரத்தையடுத்து அங்குவாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், மெக்சிகோவில் உள்ள இந்தியர்கள் மறு அறிவிப்பு வரும்வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாமென வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மெக்சிகோவில் உள்ள இந்தியர்கள் மறுஅறிவிப்பு வரும்வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாமென வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • இறந்த 20 பேரும் பயங்கரவாதிகள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    • தனது நாட்டில் நிலவும் உள்நாட்டுத் தோல்விகளையும் குறைகளையும் மறைக்கவே தாக்கியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளான நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

    தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் 7 மறைவிடங்களை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இறந்த 20 பேரும் பயங்கரவாதிகள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் பன்னு மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் சமீபத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

    ஆனால் கொல்லப்பட்டவர்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்த தாக்குதலை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

    மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் தனது நாட்டில் நிலவும் உள்நாட்டுத் தோல்விகளையும் குறைகளையும் மறைக்கவே, அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மீது இத்தகைய தாக்குதல்களை நடத்தி திசைதிருப்பும் வேலையை செய்கிறது.

    புனித ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

    ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு என்றும் இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும்" என்று தெரிவித்துள்ளார். 

    • இந்தத் திட்டத்தை படிப்படியாக அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்
    • 2029-ல் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்குவோம்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து பாத யாத்திரை திருவட்டார் பேருந்து நிலையம் முன்பு தொடங்கியது.

    திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மகாத்மா காந்தி திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பாதயாத்திரையை துவக்கி வைத்து பேசினார்.

    அவர் பேசியதாவது,

    இங்கு வந்திருக்கும் காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் அன்பான வணக்கம், இந்த கொட்டும் மழையிலும் நமது பேரியக்கத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஒன்று கூடி இந்த பாத யாத்திரையில் கலந்து கொளும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை முடக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. முதலில் வேலை நாட்களை குறைவாக கொடுத்தனர்.பின்னர் ஊதியத்தை நிறுத்தினார்.

    தற்போது பெயரை மாற்றி திட்டத்திற்கு வேறு பெயரை வைத்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு நூறு சதவீதம் நிதியை வழங்கி வந்தது. தற்போது பாஜக அரசு 60% நிதியையும் மாநில அரசு 40% நிதியையும் வழங்க வேண்டுமென கூறுகிறது.

    இந்தத் திட்டத்தை படிப்படியாக அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம், இது மட்டுமல்ல பல திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது போலவும், அந்தத் திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தது போன்றும், அல்லது அவர்கள் புதுப்பித்தது போன்றும் செய்கின்றனர்.

    இதனை நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்கிறார். நாம் எல்லோரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். மத்தியில் இருக்கும் பாஜக அரசை தூக்கி எறிவோம், 2029-ல் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் குமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் , முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செலின் மேரி, முன்னாள் வட்டார தலைவர் தங்க நாடார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் . நடைபயணம் திருவட்டார், ஆற்றூர், வீயன்னூர் வழி வேர்கிளம்பி-யை சென்றடைந்தது. 

    • காலி செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சகம் எச்சரித்துள்ளது.
    • மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும்.

    டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள குடிசை வாசிகள் மார்ச் 6ம் தேதிக்குள் அங்கிருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிரதமர் இல்லம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலை பகுதி, டெல்லியின் மிக முக்கியமான பாதுகாப்பு வளையத்திற்குள் வருகிறது.

    எனவே அங்கு அமைந்துள்ள பாய் ராம் முகாம், மஸ்ஜித் முகாம், டி.ஐ.டி முகாம் ஆகியவற்றில் உள்ள குடிசைவாசிகள் காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் அவழங்கியுள்ளது.

    மார்ச் 6-க்குள் காலி செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    வெளியேற்றப்படும் குடும்பங்களுக்குப் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ், வடமேற்கு டெல்லியில் உள்ள சாவ்தா கெவ்ரா பகுதியில் நிரந்தர வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    டெல்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், தகுதியுள்ள 717 குடும்பங்களுக்கு ஏற்கனவே பிளாட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    முன்னதாக 2025 அக்டோபரில் நோட்டீஸ் அளிக்கப்பட்டபோது, இந்த விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு சென்றது.

    சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றி வெளியேற்றத்தை மேற்கொள்ளுமாறு நவம்பர் 13, 2025 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு மாற்று இடமாக வழங்கியுள்ள 'சாவ்தா கெவ்ரா' பகுதி, தற்போதைய ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது.

    இதனால் அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    • உபகரணங்கள் கிடைக்காமல் பெரும் காலதாமதத்தைச் சந்தித்து வந்தன.
    • தடையை தற்போது உற்பத்தித் திறனைக் கருத்தில் கொண்டு அரசு தளர்த்தியுள்ளது.

    2020-ஆம் ஆண்டு எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகள் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தற்போது தளத்தியுள்ளது.

    சீன உபகரணங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் இந்தியாவின் மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை உட்பட முக்கிய துறைகளில் உள்கட்டமைப்புத் திட்டங்கள், உபகரணங்கள் கிடைக்காமல் பெரும் காலதாமதத்தைச் சந்தித்து வந்தன.

    இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

    இந்நிலையில் கட்டுபாடுகளில் தற்போது மத்திய அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, சீனாவிலிருந்து மின் விநியோக மற்றும் நிலக்கரி உற்பத்தி உபகரணங்களை வாங்குவதற்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் தடையை தற்போது உற்பத்தித் திறனைக் கருத்தில் கொண்டு அரசு தளர்த்தியுள்ளது. 

    • இது உலகின் 2வது சாலை-ரயில் சுரங்கப்பாதையாக இருக்கும்.
    • 6 மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைக்கும்.

    இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது உலகின் 2வது சாலை-ரயில் சுரங்கப்பாதையாக இருக்கும். முதலாமது ஐரோப்பாவில் அமைந்துள்ளது.

    இரட்டை வழிகள் கொண்ட இந்த பாதையின் ஒரு பகுதி ரெயில் பாதையாகவும், மற்றொரு பகுதி வாகனங்கள் செல்லும் சாலையாகவும் இருக்கும்.

    அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15.79 கி.மீ தூரத்திற்கு ரூ.18,662 கோடி செலவில் இந்த சாலை-ரயில் சுரங்கப்பாதை கட்டப்பட உள்ளது.

    இது அசாமில் உள்ள கோப்பூர் மற்றும் நுமாலிகரை இணைக்கும். பயண நேரத்தை சுமார் 6 மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைக்கும்.

    முன்னதாக நேற்று அசாம் சென்ற பிரதமர் மோடி, அவசர காலங்களில் விமானங்கள் தரையிறங்கும் சாலையும், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆறு வழிச் சாலைப் பாலத்தையும் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.   

    • மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தெரிவித்தார்.
    • 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 1,170 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    2016 முதல் 2025-ஆம் ஆண்டு வரை பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகத்திற்கு மொத்தம் 8,639 புகார்கள் வந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இது தெரியவந்துள்ளது.

    இதில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 1,170 புகார்கள் நீதிபதிகளுக்கு எதிராகப் பெறப்பட்டுள்ளன.

    உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகப் பெறப்படும் இத்தகைய புகார்கள், நீதித்துறையின் உள்விவகார நடைமுறை மூலமாகவே கையாளப்படுகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

    ×